2025 ஆம் ஆண்டில் மத்தல விமான நிலையம் அதிக விமானப் பயணிகளைக் கையாண்டு சாதனை – விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம்

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025 ஆம் ஆண்டில் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் சாதனை அளவிலான விமானப் பயணிகளைக் கையாண்டுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2013 ஆம் ஆண்டு இந்த விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பதிவான அதிகூடிய பயணிகளின் எண்ணிக்கை இதுவாகும். அந்த வகையில், 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 140,614 பயணிகள் கையாளப்பட்டுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் 703 சர்வதேச விமானங்கள் மத்தல விமான நிலையத்தில் வெற்றிகரமாகக் கையாளப்பட்டுள்ளன. அத்துடன், கடந்த மூன்று ஆண்டுகளாக மத்தல விமான நிலையத்தின் பயணிகள் போக்குவரத்தில் தொடர்ச்சியான வளர்ச்சி காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் மத்தல விமான நிலையத்தின் மீது செலுத்திய விசேட அவதானமே இச் சாதனை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில், விமான நிலையத்தைச் சுற்றியுள்ள வனவிலங்கு பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் சர்வதேச விமான நிறுவனங்கள் இங்கு சேவைகளை முன்னெடுக்கத் தயக்கம் காட்டின. இப்பிரச்சினைகளுக்குப் புதிய அரசாங்கம் எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளால், 2025 இல் விமானங்களின் வருகையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மத்தல சர்வதேச விமான நிலையத்தின் மீது நம்பிக்கை வைத்து ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவை இணைக்கும் வகையில் பல விமான நிறுவனங்கள் 2025 இல் தமது சேவைகளை முன்னெடுத்துள்ளன.

அதன்படி, ரஷ்யாவின் Red Wings, பஹ்ரைன் மற்றும் பாகிஸ்தானிலிருந்து SkyUp, டுபாயிலிருந்து Fly One, உஸ்பெகிஸ்தானிலிருந்து Centrum Air மற்றும் Uzbekistan Airways, பல்கேரியாவிலிருந்து Bulgaria Air ஆகிய நிறுவனங்கள் மத்தல வரை தமது விமானச் சேவைகளை நடத்தியுள்ளன.

மேலும், பெலாரஸின் மின்ஸ்க் நகரிலிருந்து Belavia விமான சேவை 2025 ஆம் ஆண்டில் முதன்முறையாக மத்தல சர்வதேச விமான நிலையத்திற்குத் தனது பயணங்களை ஆரம்பித்தமை ஒரு விசேட அம்சமாகும்.

மத்தல சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கையின் பல சுற்றுலாத் தலங்களை இலகுவாகச் சென்றடைய முடிவதால், நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் இது ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. அத்துடன், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அதிகப்படியான நெரிசலுக்கு ஒரு சிறந்த மாற்றீடாகவும் மூலோபாய ரீதியாக மத்தல விமான நிலையம் முக்கியத்துவம் பெறுகிறது.

பில்லியன் கணக்கான பொதுப்பணம் செலவிடப்பட்டு, பயன்பாடின்றி அழிந்து போகும் நிலையில் இருந்த மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம், 2025 இல் ஈட்டியுள்ள இந்த வெற்றி, விமான நிலையம் குறித்த புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects