07.12.02023 அன்று கொழும்பு – ஹட்டன் பிரதான வீதி தியகல பகுதியில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
இதற்கமைய போக்குவரத்துக்கான மாற்றுப் பாதையாக கொழும்பிலிருந்து வரும் வாகனங்கள் லக்ஷபான நோர்டன் பிரிட்ஜ் ஊடாக ஹட்டன் நோக்கி பயணிக்க முடியும் எனவும், கண்டியில் இருந்து வரும் வாகனங்கள் நாவலப்பிட்டி திம்புலபதன தலவாக்கலை வீதியை பயன்படுத்த முடியும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் மண்மேடு சரிந்து விழுந்த இடத்தில் மண் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇