அனர்த்த நிலைமையை கருத்தில் கொண்டு அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களை அச் சபை கேட்டுக்கொள்கிறது.
அதன்படி, அத்தகைய முறைப்பாடுகளை மாவட்ட மட்டத்தில் நிறுவப்பட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபை அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










