வெள்ள நிலைமையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈட்டை வழங்க துரித நடவடிக்கை – விவசாயம் மற்றும் காப்பீட்டு சபை

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக நட்டஈட்டை வழங்குவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த விவசாயம் மற்றும் காப்பீட்டு சபை நடவடிக்கை எடுத்துள்ளது. 

நாடு முழுவதும் நிலவிய சீரற்ற வானிலையால் ஏற்பட்ட மற்றும் வெள்ள நிலைமைகள் காரணமாக பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

இந் நிலையில் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் திட்டங்களை வழங்குவதற்கு விவசாயம் மற்றும் காப்பீட்டு சபை தீர்மானித்துள்ளது. 

கட்டாயக் காப்பீட்டின் கீழ் உள்ள பயிர்களான நெல், சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய் மற்றும் சோயா, அவரை ஆகிய பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பீடு செய்து நட்டஈட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், சேதம் தொடர்பான அறிவிப்புகள் மற்றும் பிரச்சினைகளுக்கான ஆலோசனைகளுக்காக விவசாய காப்பீட்டு சபையின் அவசர அழைப்பு இலக்கமான 1928 மூலமாகவும் விவசாயிகளுக்கு வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects