டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக மறு அறிவித்தல் வரை அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் அறவிடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்ட அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் , அதிவேக நெடுஞ்சாலையில் கட்டணம் அறவிடப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், அனைத்து நெடுஞ்சாலைகளிலும் வாகன சாரதிகள் (03.12.2025) அன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கட்டணங்களை செலுத்த தீர்மானித்ததாக அச் சபை தெரிவித்துள்ளது.
சூறாவளியின் போது பயணங்களை இலகுவாக்குவதற்காக நவம்பர் மாதம் 27 ஆம் திகதி இலவச போக்குவரத்து அமுல்படுத்தப்பட்டது.
அதன்படி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளி வட்டச் வீதி, கட்டுநாயக்க-கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை, மத்திய அதிவேக நெடுஞ்சாலை மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது சீரமைக்கப்பட்டு வீதிகள் வழமைக்கு திரும்பியுள்ளமையினால் இலவச அனுமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அனைத்து வாகனங்களும் தற்போது கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










