புகையிரத மாதாந்த பருவச்சீட்டை இ.போ.ச பேருந்துகளில் பயன் படுத்த அனுமதி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

டித்வா சூறாவளியினால் நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக, புகையிரத மாதாந்த பருவச்சீட்டைக் கொண்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் பயணிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் தெரிவித்துள்ளார். 

அதன் அடிப்படையில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அதி சொகுசு பேருந்துகள் தவிர்ந்த ஏனைய சாதாரண பேருந்துகளில் புகையிரத மாதாந்த பருவச்சீட்டைப் பயன்படுத்தி போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார். 

இது தொடர்பில் பேருந்து ஊழியர்கள் மற்றும் குழுவினருக்கு தெளிவு படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை மேலும் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects