மட்டக்களப்பு மாவட்டத்தில் டித்வா புயல் மற்றும் வெள்ளத்தினால் விவசாயத்துறையில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜின் தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (08) நடைபெற்றது.
டித்வா புயல் மற்றும் வெள்ளத்தினால் விவசாயத்துறையில் ஏற்பட்ட பாதிப்புக்களை சரியான முறையில் கணக்கொடுத்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கான உரிய நஷ்டஈடுகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்கு இதன் போது கலந்துரையாடப்பட்டன.
மாவட்டத்தில் விவசாய துறைசார் திணைக்களங்கள் அனர்த்த பாதிப்புக்கள் தொடர்பான தரவுகளை துரிதமாக சேகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ சனீர், திணைக்கள தலைவர்கள், விவசாய, கால்நடை, காணி, நீர்ப்பாசனம் ஆகிய திணைக்களங்களுக்கான மாவட்ட இணைப்பாளர் கே.திலகநாதன்,
பணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.










இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










