நுவரெலியாவுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு வீதியிலும் இரவு வேளையில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் 11.12.2025 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த நுவரெலியா மாவட்ட செயலாளர்,
போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டிருந்த கம்பளை – நுவரெலியா பிரதான வீதியின் கட்டுகித்துல பகுதியில் மீண்டும் மண்மேடு சரிந்து வீதி தடைப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட மாவட்ட செயலாளர், நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாகத் தொடர்ந்தும் வீதிகளில் மண்மேடுகள் சரியும் அபாயம் காணப்படுவதால் இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
‘திட்வா’ புயலினால் நுவரெலியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தேவையான உணவுப் பொருட்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அரசாங்கத்தை சங்கடப்படுத்தும் நோக்கில் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத சிலர் கூறும் சில அறிக்கைகளில் எந்த உண்மையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










