சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவினரினால் மட்டக்களப்பில் உள்ள சமூக நலன் விரும்பிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று 11.12.2025 அன்று சர்வோதயா மண்டபத்தில் நடைபெற்றது.
கொழும்பை தலைமையமாக கொண்ட சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவினர் “கைதிகளின் உரிமைகளை பாதுகாத்து மனித பெருமையினை உயர்த்துவோம்” எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் குறித்த செயற்திட்டத்தினை மேற்கொண்டு வருகின்றது.
சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் முகாமையாளர் ரசிக்க குணவர்த்தன தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் பணிப்பாளர் சுதேஸ் நந்திமாசில்வா, திட்ட அதிகாரி தி.ஷாமினி, ஊடக இணைப்பாளர் கலும்விஜேசிங்க என பலர் கலந்து கொண்டனர்.
சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவினர் கைதிகளின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான சட்ட ரீதியான உதவிகளை பத்து வருடங்களிற்கு மேலாக வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










