நாட்டில் சில பகுதிகளில் 15 மணிநேரம் நீர் வெட்டு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நடைபெறும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாட்டில் சில பகுதிகளில் 15 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இன்று (15.12.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நீர் விநியோக தடையானது 17.12.2025 அன்று மாலை 4.00 மணி முதல் 18.12.2025 அன்று காலை 07.00 மணி வரை அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம், மஹர பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலேயே இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

நீர் விநியோகம் தடைப்படுவதால் நுகர்வோருக்கு ஏற்படும்  சிரமத்திற்கு  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வருத்தம் வெளியிட்டிருப்பதுடன்,  தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects