“உயிர்களை காப்போம் ஒரு துளி இரத்தம் போதும்” எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மறை மாவட்ட கத்தோலிக்க இளைஞர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இரத்த தான நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது.
அதன் அடிப்படையில் இல 27, மட்டக்களப்பு பார்வீதியில் அமைந்துள்ள Eastern Technical Institute (ETI) எனும் கற்கை நிறுவனத்தில் 21.12.2025 அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
உலக இரட்சகர் இயேசு கிறிஸ்து பாலகனாக பிறந்த புனித கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, “அன்பும் தியாகமும் சேவையும்” என்ற கிறிஸ்துவின் போதனையை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இந்த இரத்த தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனைவரையும் கலந்துகொண்டு இரத்த தானம் செய்யுமாறு ஏற்பாட்டு குழுவினர் கொடையாளிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










