கொத்து , ப்ரைட்ரைஸ் மற்றும் சோற்றுப்பொதி ஆகியவற்றின் விலைகள் 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அச் சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையினை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந் நிலையில், தேநீர் மற்றும் பால் தேநீர் என்பவற்றின் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇