மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் முற்தடுப்பை மேற்கொள்வதற்காக கிராம மட்ட குழுக்களுக்கான பயிற்சிப்பட்டறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு உத்தியோகத்தர் ப.தினேஷ் அவர்களின் ஏற்பாட்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் அன்று 23.11.2023 இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண புனர்வாழ்வு பொறுப்பதிகாரி லெப்டினன் கேர்ணல் சன்டிக்க எகலப்போல கலந்து கொண்டார்.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட இளைஞர் யுவதிகள் மற்றும் கிராம மட்ட குழுக்களுக்கள் கிராம, பிரதேச மட்டங்களில் போதைப் பொருள் பாவனையையும், அதன் மூலம் ஏற்படும் பிரச்சினைகளையும் குறைப்பதற்கும் இளைஞர்களை வலுப்படுத்தும் நோக்கில் இச்செயலமர்வு இடம்பெற்றது.
கிராம, பிரதேச மட்டத்தில் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு தேவையான உளவள ஆலோசனை இதன் போது வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் வளவாளராக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய சிரேஷ்ட நிகழ்ச்சி அதிகாரி ஏ.சி.றஹீம் மற்றும் உத்தியோகத்தர்கள், மாவட்ட இணைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇