4 .12. 2023 அன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கு காலணி வவுச்சர் விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளது காலணி வவுச்சர் விநியோகம்ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
27.11.2023 அன்று பாராளுமன்றத்தில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட சபை உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
காலணி வவுச்சர் விநியோகம் எதிர்வரும் 27 .12.2023 அன்று நிறைவடையும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
740,000 சிறார்களுக்கு வவுச்சர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இதற்காக மிகவும் கஸ்டப்பிரதேச மற்றும் பின்தங்கிய பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇