நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவு – வளிமண்டலவியல் திணைக்களம்

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நுவரெலியாவில் இன்று (22.01.2026) குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதுடன், அது 3.5 பாகை செல்சியஸாக காணப்பட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய தரவு சேகரிப்பு நிலையங்களில் இன்று அதிகாலை பெறப்பட்ட தரவுகளின் படி, அண்மைக்காலத்தில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில், ஏனைய பிரதேசங்களில் பதிவான வெப்பநிலை விபரம் வருமாறு: 

பண்டாரவளை: 11.5 பாகை செல்சியஸ் 

பதுளை: 15.1 பாகை செல்சியஸ் 

கட்டுகஸ்தோட்டை: 15.9 பாகை செல்சியஸ் 

இதேவேளை, அதிகபட்ச வெப்பநிலையாக முல்லைத்தீவில் 25.3 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளது. அம்பாந்தோட்டையில் 22 பாகை செல்சியஸாகவும், கொழும்பில் 22.1 பாகை செல்சியஸாகவும் வெப்பநிலை பதிவாகியிருந்தது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects