புதிய மின் விளக்குகளால் ஒளிர ஆரம்பித்துள்ள கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணப் போட்டிகளை முன்னிட்டு 175 கோடி ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ள நுற்றாண்டு பழைமைவாய்ந்த கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் பொருத்தப்பட்டுள்ள எல்ஈடி மின்விளக்கு கட்டமைப்பு 28.01.2026 அன்று மாலை வைபவரீதியாக ஒளிரச் செய்யப்பட்டது.

இதற்கமைய நாட்டிலுள்ள சர்வதேச கிரிக்கட் மைதானங்களில் மின்விளக்கு கட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்ட 5 ஆவது மைதானம் இதுவாகும்.

இதுவரையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானம், பல்லேகலை, சூரியவௌ மற்றும் ரங்கிரி தம்புள்ளை ஆகிய மைதானங்களில் குறித்த மின் விளக்கு கட்டமைப்பு காணப்பட்டது.

மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒளியமைப்பு LED தொழில்நுட்பத்தின் அடிப்படையில் 6 தூண்களைக் கொண்டதாக உள்ளது.

குறித்த மின்விளக்கு கட்டமைப்பு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா, விளையாட்டத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, சின்ஹலீஸ் விளையாட்டுக் கழகத்தின் (எஸ்.எஸ்.சி.) தலைவர் ரஞ்தித் பண்டிதகே ஆகியோரின் முன்னிலையில் ஒளிரச் செய்யப்பட்டது.

இலங்கையில் உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ள 3 விளையாட்டரங்குகளில் எஸ்.எஸ்.சி. மைதானமும் ஒன்றாகும்.

பாகிஸ்தானுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான ஆரம்ப போட்டி இந்த மைதானத்தில் பெப்ரவரி 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த ஆரம்ப விழாவின் போது, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக முதல் பந்தை வீச, அதனை இலங்கை கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான சனத் ஜயசூரிய எதிர்கொண்டார்.

இந்த உத்தியோகபூர்வ திறப்பு விழாவினைத் தொடர்ந்து, SSC அணிக்கும் இலங்கை கிரிக்கெட் (SLC) அபிவிருத்தி அணிக்கும் இடையில் ஒரு நட்புமுறைப் போட்டி நடைபெற்றது.

நிகழ்வில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா, பொருளாளர் சுஜீவ கரலியத்த, நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects