மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் கடமையாற்றும் பிரதேச செயலாளர்களுக்கான கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இன்று (05.02.2026) நடைபெற்றது.
இதன் போது அலுவலக நிருவாக விடயங்கள், உத்தியோகத்தர்களின் இடம் மாற்றம், அலுவலக வாகன பாவனை, அஸ்வசும மற்றும் புதிய பயிற்சிகள் தொடர்பாகவும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் பிரதேச செயலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றை கையாளுவதற்கான உபாய முறைகளை அரசாங்க அதிபர் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் காயத்திரி ரமேஸ், பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எஸ்.சசிகரன், பிரதம பொறியியலாளர் ரி.சுமன், திணைக்கள தலைவர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










