2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலைகள் சார்ந்த போதைப்பொருள் ஒழிப்புத் தொடர்பான புதிய சுற்றுநிருபத்தை வெளியிடுவது பற்றிக் கலந்துரையாடல் ஒன்று 05.02.2026 அன்று பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் போது புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் அதிகாரிகள், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோரை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் வைத்து சந்தித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர்,
“போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைத் தகுந்த புனர்வாழ்வு நிலையங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
குறிப்பாகப் பாடசாலைச் சூழல் குறித்து அதிக அவதானத்தைச் செலுத்த வேண்டும். இவ்விடயத்தில் இலங்கை பொலிஸாரின் தலையீடு மிகவும் முக்கியமானதாக அமைகின்றது.” என தெரிவித்தார்.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










