டித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட புத்தளம் மார்க்கத்தின் ஊடான புகையிரத சேவைகள், இன்று (16.02.2026) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன என புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, புத்தளம் புகையிரத மார்க்கம் இன்று (16.02.2026) முதல் முழுமையாகத் திறக்கப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், கொழும்பு கோட்டையிலிருந்து புத்தளம் வரை புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்ட புகையிரத சேவைகள், சிலாபம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










