சமச்சீரற்ற காது அமைப்பினை சீராக்கும் நவீன சத்திர சிகிச்சை…..
உலகளவில் ஒரு சதவீதத்தினருக்கு அவர்களின் காது அமைப்பு இயல்பான அளவைவிட கூடுதலாக இருக்கும். சிலருக்கு இரண்டு காதுகளில் ஒன்று அல்லது இரண்டுமே வித்தியாசமான அமைப்பில் இருக்கக்கூடும். இதற்கு மருத்துவ மொழியில் பிராமினன்ட் இயர்ஸ் என குறிப்பிடுகிறார்கள். இத்தகைய பாதிப்பிற்கு தற்போது நவீன சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் அளிக்கப்படுகிறது என வைத்தியர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
எம்மில் சிலருக்கு அவர்களின் முகத் தோற்றத்தில் காது மற்றும் அதன் அமைப்பு எளிதில் கவனத்தை ஈர்த்து விடும் வகையில் அமையப்பெற்றிருக்கும். சிலருக்கு முகத்தில் இரண்டு பக்கமும் உள்ள காதுகளில் ஒன்று அளவில் சிறியதாகவும், மற்றொன்று அளவில் பெரியதாகவும், சமச்சீரற்றதாகவும் இருக்கக்கூடும். இதனை தற்போதைய நவீன மருத்துவ தொழில்நுட்பங்களுடன் கூடிய சத்திர சிகிச்சை மூலம் சீரமைக்க இயலும்.
மேலும் இத்தகைய அமைப்பு உடையவர்களுக்கு அவர்களுடைய காதில் உள்ள கார்ட்டிலேஜ் எனப்படும் குருத்தெலும்பு அதிகமாக இருப்பதே இதற்கு காரணம். இதனை வைத்தியர்கள் பிரத்யேக பரிசோதனை மூலம் துல்லியமாக அவதானித்து சிறிய அளவிலான சத்திர சிகிச்சை மூலம் இதனை சீரமைப்பார்கள். இதன் பிறகு அவர்களுடைய தோற்றம் இயல்பானதாக மாறுவதால்.. தங்களது தோற்றத்தின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்திக்கொள்வதுடன் மகிழ்ச்சியாகவும் இருப்பர்.
வைத்தியர் விஷ்ணு பாபு


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










