இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அதன் அடிப்படையில், I தர ஜேலர், II தர ஜேலர், சார்ஜன்ட், கட்டுப்பாட்டாளர், தாதி, மருந்தாளர் உள்ளிட்ட பதவிகளுக்கென ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளது.
சிறைச்சாலைகள் திணைக்களத்தில் கடமையாற்றிய நிலையில் உரிய முறையில் ஓய்வுப் பெற்றுள்ள 65 வயதிற்கு குறைந்த சிறைச்சாலை அதிகாரிகளின் பதவிகளுக்கென இவ்வாறு புதியவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.
மேலதிக விபரங்களை www.prisons.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










