2022ம் (2023) ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு
அதன் பிரகாரம் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் தங்களது பெறுபேறுகளை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தள முகவரிகளுக்குள் பிரவேசித்து அறிந்துகொள்ள முடியும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பரீட்சைக்கு 3 இலட்சத்து 94 ஆயிரத்து 450 பாடசாலை பரீட்சார்த்திகளும், 78 ஆயிரத்து 103 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்கலாக மொத்தமாக 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 பேர் தோற்றியிருந்தனர்.
வெளியிடப்பட்டுள்ள கல்விபொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇