எரிபொருளை சேமித்து வைப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது உருவாகியுள்ள பாதகமான சூழ்நிலை காரணமாக, பொதுமக்கள் முறையற்ற விதத்தில் எரிபொருளை சேமித்து வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் கண்டறியப்பட்டுள்தாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 

எரிபொருள் நாட்டில் தேவையான அளவில் கையிருப்பு இருப்பதாகவும், இதுகுறித்து பொதுமக்கள் தேவையற்ற முறையில் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இருப்பினும், சில தரப்பினர் திட்டமிடப்பட்ட வகையில் போத்தல்கள் அல்லது பிற வெளிப்புறக் கொள்கலன்களில் எரிபொருளை சேகரித்து வருவதால், இத்தகைய செயல்களைத் தடுக்க மீன்பிடிப் படகுகள், தொழிற்சாலைகள், பணியிடங்கள், விவசாயம் மற்றும் வீட்டுத் தேவைகள் ஆகியவற்றிற்குத் தவிர மீண்டும் அறிவிப்பு வழங்கப்படும் வரை, கொல்களன்கள், போத்தல் அல்லது வேறு பொருட்களில் எரிபொருளை வழங்காமல் இருப்பதற்கு எரிபொருள் நிலைய மேலாண்மைத்துவத்துடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுக்க அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு தேவையற்ற முறையில் எரிபொருளை சேகரித்து கையிருப்பில் வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் எரிபொருள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு பொய்யான தகவல்களைப் பரப்பும் நபர்கள் அல்லது குழுக்கள் குறித்து விசாரணை செய்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பிரிவு  எச்சரித்துள்ளது. 

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects