அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு நாளை (12.03.2026) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இந்தக் கொடுப்பனவு 1,408,635 குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இதற்காக மொத்தம் 11,179,801,250.00 ரூபாவிற்கும் அதிகமான தொகை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.
இரண்டாம் கட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்காகவும் நாளை 2,350,530,000.00 ரூபாவிற்கும் அதிகமான நிதி வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக அந்தச் சபை மேலும் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










