மட்டக்களப்பு மாவட்ட மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் “தேசத்தை கட்டியெழுப்பும் செழிப்பான கிராமம்” சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராமங்களை அங்குரார்ப்பணம் செய்யும் வேலைத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் 10.03.2026 அன்று பிரேதச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
உதவி பிரதேச செயலாளர் கி.இளம் குமுதன் தலைமையில், பிரதேச செயலக உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற
இந்நிகழ்வில், சமுதாய உற்பத்தித்திறன் மாதிரிக் குழுவின் தலைவர், செயலாளர், பொருளாளர், உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் தலைமை உரை நிகழ்த்துவது, மாதிரி கிராமத்திற்கான பெயர் பலகை திரை நீக்கம் மற்றும் அங்குரார்ப்பண நிகழ்வு நடாத்துவது தொடர்பாக இதன்போது திட்டமிடப்பட்டதுடன், இக் கிராமத்திற்கான சமுதாய மேம்பாட்டு திட்ட முன்மொழிவுகள் குறித்தும் ஆராயப்பட்டது.
மாதிரி கிராமத்திற்கான திட்ட முன்மொழிவுகளாக மாதிரி குழுவினால் மூன்று திட்டங்கள் முன்மொழியப்பட்டன .
அதன்படி, கிராமத்தில் 50 குடும்பங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் நீர் விநியோகத் திட்டம் தொடர்பாக முன்மொழியப்பட்டது.
அத்துடன், கிராமத்தில் மர முந்திரிகை பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டாலும் மர முந்திரி விதையினை அயல் கிராமங்களில் இருந்து வியாபாரிகள் பெறுகின்றனர். ஆனால் மரமுந்திரிகை பழத்தினை விற்பனை செய்ய முடியாத வண்ணம் துர்ப்பாக்கிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். ஆதலால் அப்பழத்தினை சேகரித்து அப்பழத்தின் மூலம் பழச்சாறு உற்பத்தி செய்வதற்கான இயந்திரம் ஒன்றினை கொள்வனவு செய்வது தொடர்பாகவும், கிராமத்திற்கான ஆலயத்திற்கு மலசல கூட வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாகவும் முன்மொழியப்பட்டது.
இவ்விடயங்களை மாவட்ட செயலகத்திற்கு முன்மொழிவதாகவும், பெயர் பலகை திரைநீக்கம் செய்யும் நிகழ்வும் ஏற்பாட்டுக் குழுவுக்கான நிகழ்ச்சி நிரல் பகிர்ந்தளிப்பும் வழங்கப்பட்டது.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










