தேசிய ரீதியில் 10 நகரங்களை அழகு படுத்தும் செயற்திட்டத்தில் மட்டக்களப்பு நகர் தெரிவு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தேசிய ரீதியில் 10 நகரங்களை அழகு படுத்தும் செயற்திட்டத்தில் மட்டக்களப்பு நகர் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி பிரபுவின் பங்கு பற்றுதலுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் தலைமையில் கிழக்கு மாகாண நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் எல்.ஜெ.லியனகேவின் பங்கு பற்றுதலுடன் மட்டக்களப்பு நகரை அழகு படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 10.03.2026 அன்று நடைபெற்றது.

இதன் போது மட்டக்களப்பு நகர் பகுதியில் அபிவிருத்தி செய்ய வேண்டிய திட்ட ஆலோசனை இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம், திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவநிதன், மாநகர சபை ஆணையாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவி பணிப்பாளர், கலாநிதி கே.பிரேம குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects