புதிய கியூ.ஆர் குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறையின் கீழ், அனைத்து நோயாளர் காவு வண்டிகளுக்கும் விசேட முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.
இதன் மூலம், அவசர சிகிச்சை சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, நோயாளர் காவு வண்டிகள் இலங்கை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், களஞ்சியசாலைகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என பணிப்பாளர் நாயகம் மயூயர நெத்திகுமாரகே உறுதிப்படுத்தியுள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










