கடுமையான இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, மொனராகலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கடும் மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அம்பர் எச்சரிக்கையை  வளிமண்டலவியல் திணைக்களம்  விடுத்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இன்று (17.03.2026) நண்பகல் விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும்.

அதன்படி, பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, மொனராகலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் கடுமையான இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது, குறிப்பிட்ட சில பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects