இலங்கையின் டிஜிட்டல் சுற்றுலாத்துறையை வலுப்படுத்த ‘Lily Lanka’ டிஜிட்டல் தளம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கையின் டிஜிட்டல் சுற்றுலா சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, ‘Lily Lanka’ எனும் புதிய டிஜிட்டல் தளம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஜெட்விங் ஹோட்டலின் ‘பார்ன்ஸ் ஹால்’ மண்டபத்தில் 17.03.2026 அன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித ஹேரத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இத்தளத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

சுற்றுலாத்துறை சார் பங்குதாரர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர், சர்வதேச சுற்றுலாப் பயணிகள் ஒரு நாட்டைத் தேர்ந்தெடுப்பதிலும் பதிவுகளை மேற்கொள்வதிலும் டிஜிட்டல் தளங்கள் இன்று பாரிய செல்வாக்கு செலுத்துவதை சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் பரந்த டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கை மற்றும் ‘ஸ்மார்ட் சுற்றுலா’ இலக்குகளுடன் Lily Lanka தளம் ஒன்றிணைந்து செயல்படும் என அவர் தெரிவித்தார்.

இவ்வாறான உள்நாட்டு டிஜிட்டல் தளங்கள் மூலம், சுற்றுலாத்துறை வாயிலாகக் கிடைக்கும் வருமானத்தின் பெரும்பகுதியை நாட்டுக்குள்ளேயே தக்கவைத்துக்கொள்ள முடியும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

சுற்றுலாப் பயணிகளின் தரவுகளை (Data) தேசியக் கட்டமைப்புக்குள் முகாமைத்துவம் செய்வதன் மூலம் இலங்கையை உலகளாவிய ரீதியில் சிறந்த சுற்றுலாத் தலமாக விளம்பரப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சுற்றுலாத்துறையின் நிலையான வளர்ச்சிக்கு அரசாங்கத்திற்கும் தனியார் துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்திய அமைச்சர், ஹோட்டல்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் பயண முகவர் நிலையங்கள் இத் தளத்திற்குத் தமது முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects