இன்று (19.03.2026) பிற்பகல் 2:00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல மாகாணங்களில் அதிக மின்னல் தாக்கத்துடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, தென், ஊவா, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மன்னார் மாவட்டம் என்பன பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக அறிவிக்கக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.
பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் இந்தப் பிரதேசங்களில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்களைக் குறைத்துக்கொள்வதற்குப் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம்)


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










