மட்டக்களப்பில் தெரிவுசெய்யப்பட்ட பெண் தொழில் முனைவோருக்கான பயிற்சிப்பட்டறை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

“பெண் தொழில் முனைவோருக்கு அதிகாரம் வழங்குதல்” எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில் தெரிவுசெய்யப்பட்ட பெண் தொழில் முனைவோருக்கான பயிற்சிப்பட்டறை மட்டக்களப்பு MJF கிழக்கு மையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் SWOT பகுப்பாய்வு, இணைய பாதுகாப்பு மற்றும் ஆன்லைன் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு, 60 வினாடி வணிக முன்மொழிவு பயிற்சி, பிராண்டிங் மற்றும் கதை சொல்லல் அமர்வுகள், தன்னம்பிக்கை வளர்ப்பு செயல்பாடுகள் மற்றும் எதிர்கால இலக்குகள் திட்டமிடும் செயல்பாடுகள் என்பன நடைபெற்றது.

MJF கிழக்கு மைய மேலாளர் கௌரிஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வளவாளர்களாக தொழில்முறை சமூக பணியாளர் விஜயநாதன் துசாந்தரா மற்றும் வணிக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் சரண்யா லவபிரதன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் நிறுவன ஊழியர்கள் மற்றும் பெண் தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

பெண்கள் தங்கள் தொழில் திறன்களை உணர்ந்து, தன்னம்பிக்கை உயர்ந்து, பாதுகாப்பாக ஆன்லைன் தளங்களை பயன்படுத்தும் விழிப்புணர்வும் மேம்பட்டது. அவர்கள் எதிர்காலத்தில் தங்களது தொழில்களை வளர்த்து, சமூகத்தில் மாற்றம் கொண்டு வர உதவுவதே இந் நிகழ்வின் முக்கிய நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects