இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுடனான கிரிக்கெட் தொடர்களுக்கான பயிற்றுவிப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இருந்த கிறிஸ் சில்வர்வூட் அண்மையில் இராஜினாமா செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு சனத் ஜெயசூரிய தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் அவர் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக பணியாற்றுகின்மையும் குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇