நாட்டில் 5,000 பேர் சிறுநீரக நோயின் இறுதிக்கட்டத்தில் – சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தற்போது நாட்டில் 5,000 நோயாளர்கள் சிறுநீரக நோயின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஆண்டொன்றுக்கு சுமார் 300 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாகவும் அப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில், சிறுநீரக நோய் விசேட வைத்திய நிபுணர் நாலக ஹேரத் கருத்து தெரிவிக்கையில்,

நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், வருடத்திற்கு ஒரு முறையாவது தங்களது சிறுநீரகங்களை பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்.

சிறுநீரக நோய்க்கான பிரதான காரணங்களாக அமைவது நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் என்பனவாகும் என வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆரம்பக்கட்டப் பரிசோதனைகள் இன்மையால், பல நோயாளர்கள் இந்நோயின் இறுதிக்கட்டத்தை எட்டிய பின்னரே தமக்கு நோய் இருப்பதை கண்டறிகின்றனர்.

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, முறையான மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றுவதன் மூலம், சிறுநீரக செயலிழப்பு அபாயத்தைக் குறைத்து நோயாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும் என தெரிவித்தார்.    

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects