க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்பு வெளியிடப்படும் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்பு வெளியிடக்கூடியதாக இருக்குமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான செயல்முறைகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த வருடம் நவம்பர் 10 ஆம் திகதி ஆரம்பமான உயர்தர பரீட்சையின் சில பாடங்கள் டித்வா சூறாவளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இந்த வருடம் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை மீண்டும் நடத்தப்பட்டன.

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சுமார் மூன்று இலட்சம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects