சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஹட்டன் டிப்போவினால் புதிய சஃபாரி பேருந்து சேவை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபை டிப்போவினால் நவீன வசதிகளுடன் கூடிய சுற்றுலா சஃபாரி பேருந்து
ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இரத்மலானை டிப்போவிலிருந்து பெறப்பட்ட பழைய பேருந்து ஒன்று, சுமார் 40 இலட்சம் ரூபா செலவில் இவ்வாறு சஃபாரி பேருந்தாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

42 ஆசனங்களைக் கொண்ட இந்தப் பேருந்தில் ஸ்டீரியோ ஒலி அமைப்பு, குளிர்சாதனப் பெட்டி மற்றும் தொலைக்காட்சி வசதிகள் உள்ளன.

மேலும், இதன் கூரை மற்றும் ஜன்னல்களைத் திறந்து வைக்கக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்து ஸ்ரீ பாத (சிவனொளிபாத மலை) மற்றும் நுவரெலியா மாவட்ட சுற்றுலா வலயங்களை உள்ளடக்கிய வகையில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

ஹட்டன் டிப்போ முகாமையாளர் பாலித பண்டார அண்மையில் இந்தப் பேருந்தைப் பார்வையிட்டார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects