பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடத் தீர்மானம் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடத் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இன்று (06.04.2026) காலை 8 மணியுடன் பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

தமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துமாறு அந்த சங்கம் கோரியிருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் (09.04.2026) ஆம் திகதி பேச்சுவார்த்தை ஒன்றினை நடத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ 05.04.2026 அன்று அறிவித்திருந்தார்.

உலக சுகாதார அமைப்பின் மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காகத் தாம் இன்று இந்தியா புறப்படவுள்ளதாகவும், மீண்டும் நாடு திரும்பியதும் குறித்த பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

இதனையடுத்து தமது சங்கம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects