ஐ.எம்.எப் பிரதிநிதிகள் மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று 06.04.2026 அன்று நடைபெற்றது.

இதன்போது, நாட்டின் கைத்தொழில் துறையிலுள்ள ஆற்றல்கள் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக கைத்தொழில் துறை வழங்கும் பங்களிப்பு குறித்து விரிவாகக் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் எடுத்துள்ள கொள்கை ரீதியான தீர்மானங்கள் குறித்து அமைச்சர் இதன்போது பிரதிநிதிகள் குழுவிற்கு விளக்கமளித்தார்.

இலங்கை தற்போது முன்னெடுத்து வரும் பொருளாதார சீர்திருத்தச் செயற்பாட்டில் கைத்தொழில் துறையின் வளர்ச்சியின் முக்கியத்துவம் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளால் இதன்போது பாராட்டுக்குள்ளாக்கப்பட்டது.

உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் நிலவும் தடைகளை நீக்குதல், ஏற்றுமதிச் செயற்பாடுகளை எளிமைப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்குச் சாதகமான சூழலை உருவாக்குதல் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு இணையாக உள்நாட்டு கைத்தொழிலாளர்களுக்கு வழங்கக்கூடிய நிவாரணங்கள் மற்றும் நிதி வசதிகள் குறித்தும் இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects