போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், இலங்கை புகையிரத திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கொழும்பு கோட்டை புகையிரத நிலைய நவீனமயமாக்கல் பணிகள் நாளை (09.04.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நாளை காலை 09.00 மணிக்கு இந்த நவீனமயமாக்கல் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.
‘கிளீன் ஸ்ரீ லங்கா’ (Clean Sri Lanka) செயலகத்தின் மேற்பார்வையின் கீழ், பயணிகளுக்குத் தேவையான நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடுகளை உள்ளடக்கியதாக இந்தப் புனரமைப்புப் பணிகள் இடம்பெறவுள்ளன.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










