‘சில்வர் டான்’ எனப்படும் அதி சொகுசு உல்லாசக் கப்பல் 09.04.2026 அன்று காலியை வந்தடைந்தது.
இக் கப்பலில் 596 சுற்றுலாப் பயணிகள், 411 பணியாளர்ககள் அடங்களாக
சுமார் 1,007 பேர் வந்துள்ளனர்.
தற்போது காலி துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள இந்தக் கப்பல், 213 மீட்டர் நீளமுடையதுடன், உயர்தர வசதிகளுடன் கூடிய 11 தளங்களை கொண்டுள்ளது.
இந்த உல்லாசக் கப்பலில் வந்துள்ள சுற்றுலாப் பயணிகள், காலி கோட்டை, பலப்பிட்டிய மடு ஆறு, உனவட்டுன, ருமசல மற்றும் கொக்கல உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“தி கியூரியஸ் அண்ட் தி சீ” என்ற கருப்பொருளில் 141 நாள் உலகப் பயணத்தை மேற்கொண்டு வரும் இந்தக் கப்பல், அதன் பயணத்தின் ஒரு பகுதியாக ஏப்ரல் 7ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தையும் வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து நேற்று காலியை வந்தடைந்த இந்தக் கப்பல், கொழும்பு துறைமுகத்திற்குப் புறப்படும் முன் இன்று மாலை வரை காலி கடற்பரப்பில் நங்கூரமிட்டு நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










