2026 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் சுமார் ரூ. 606,002 மில்லியன் வரி வருமானத்தைப் பெற்றுள்ளதாக இலங்கை உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் வரி வருமானம் சுமார் 17.7 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
வருமான வரி, பெறுமதிசேர் வரி மற்றும் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி உள்ளிட்ட அனைத்து முக்கிய வரி வகைகளிலிருந்தும் பெறப்பட்ட வருமானங்கள் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான பொருளாதார விரிவாக்கமும், திறமையான வரிக் கொள்கைகளும் இந்த வளர்ச்சிக்கான முக்கிய காரணங்களாக இருப்பதாக இறைவரித்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், தன்னார்வமாக முன்வந்து வரி செலுத்தும் விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளதுடன், இது நாட்டின் வரி அமைப்பின் மீது பொதுமக்களின் நம்பிக்கை அதிகரித்து வருவதைக் காட்டுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான மொத்த வரி இலக்கில் சுமார் 25 சதவீதத்தை முதல் காலாண்டிலேயே அடைய உதவிய அனைவருக்கும் தனது பாராட்டுக்களை இறைவரித்திணைக்கள ஆணையாளர் ஜெனரல் ருக்தேவி பி. எச். பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


இச் செய்திaயினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










