சிசு செரிய சேவைக்கு மேலும் 200 பேருந்துகளை இணைக்கத் திட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சிசு செரிய பாடசாலை பேருந்து சேவையை மேலும் முறைப்படுத்துவதற்காக, 2026 ஆம் ஆண்டில் 200 க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகளை புதிதாக இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இசுருபாய வளாகத்தில் 13.03.2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தினர்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவை இணைந்து இந்த ‘சிசு செரிய’ பேருந்து சேவையை நடைமுறைப்படுத்துகின்றன.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், பாடசாலை மாணவர் போக்குவரத்து தொடர்பான அரசின் எதிர்காலத் திட்டம் குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போது, பாடசாலை மாணவர்களைப் பாதுகாப்பாகப் போக்குவரத்துச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதற்காக இந்த ஆண்டில் சுமார் ஒரு பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பொறியியலாளர் பி.ஏ. சந்திரபால மற்றும் அதன் திட்டமிடல் பணிப்பாளர் ஆலோகா கருணாரத்ன ஆகியோரும் கருத்து வௌியிட்டனர்.

தனியார் பாடசாலைப் போக்குவரத்துச் சேவைகளைச் சரியாகத் தரப்படுத்துவதற்கு சட்ட ரீதியாக இருந்த தடைகளை நீக்குவது குறித்து இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இதன் மூலம், அந்த வாகனங்களின் தரம், சாரதிகளின் அனுபவம் மற்றும் வாகன உதவியாளர் பற்றிய தகவல்கள் போன்ற சில சட்ட மற்றும் கொள்கை ரீதியான முடிவுகள் தொடர்பான சட்டமூலங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ‘சிசு செரிய’ பேருந்து சேவையை நாடு முழுவதும் விரிவுப்படுத்த, தனியார் பேருந்துகள் மற்றும் சிறிய அளவிலான பாதுகாப்பான வாகனங்களின் உரிமையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.

இதற்காக, தமக்கு அருகிலுள்ள போக்குவரத்துச் சபை அல்லது இலங்கை போக்குவரத்துச் சபை அலுவலகத்திற்குத் தமது விருப்பத்தைத் தெரிவிப்பதன் மூலம் பங்களிக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டது.

பாடசாலைகளில் போக்குவரத்து சிரமங்களை எதிர்கொள்ளும் மாணவர்கள் இருந்தால், அவர்கள் குறித்து அதிபர் ஊடாக மேற்கூறிய நிறுவனங்களுக்குத் அறிவிப்பதன் மூலம் இந்த வசதிகளைச் செய்துகொடுக்க முடியும் என்றும் மேலதிகமாகத் தெரிவிக்கப்பட்டது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects