அம்புலன்ஸ்கள் இறக்குமதி செய்யும் போது 18 சதவீத பெறுமதி சேர் வரி (VAT) அறவிடப்படும் என பொது நிதிக் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா 06.12.2023 அன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
“சுவசெரிய உள்ளிட்ட அம்புலன்ஸ்களில் இருந்து VAT வசூலிப்பது நியாயமற்றது, VAT திருத்தத்தின் கீழ் முன்மொழியப்பட்ட பிரேரணையில் திருத்தம் செய்யப்பட வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.