எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் ஒருதொகை சம்பா அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என அரச வர்த்தக பொது கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது
5,000 மெட்ரிக் தொன் சம்பா அரிசியை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து அரிசி கொள்வனவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாட்டு விலைக்கு மேல் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇