அனைத்து உள்ளூராட்சி கொடுப்பனவுகளையும் இணையத்தில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னோடி திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் மக்கள் வரி உட்பட பல்வேறு கொடுப்பனவுகளை சிறப்பாக செலுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
வரி வருவாயை அதிகரிப்பது மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைப்பது இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய முறை ஜனவரி 1, 2024 முதல் அமுல்படுத்தப்படும்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…