அனுராதபுரத்தில் குளங்களை புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

டித்வா அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள குளங்களை முழுமையாக புனரமைக்கும் பணிகள் துரிதகதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.

மேற்படி திட்டத்தின்  கீழ் டித்வா அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட அநுராதபுரம் எலயாபத்துவ மஹமாங்கடவள குளம் 181 மில்லியன் ரூபா செலவில் புதிதாக திருத்திய வைக்கப்படவுள்ளது.

விவசாயத்துறை அமைச்சர் கே.டீ.லால்காந்தவினால் சுப வேளையில் நேற்று முன்தினம் குளம் புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்து விட்டது.

இதன் மூலம் மஹமாங்கடவள பகுதியிலுள்ள இக்குளத்தின் கீழ் நெற் பயிர்ச் செய்கையினை மேற்கொள்ளும் 800 ஹெக்டெயாருக்கும் அதிகமான வயல் காணிகளுடய விவசாயிகள் பெரிதும் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந் நிகழ்வில் வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சேன நானயக்கார,சுசந்தகுமார நவரத்ன மற்றும் நீர்ப்பாசன திணைக்கள உயர் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects