பலத்த மின்னல் தாக்கம் குறித்து வெளியான செய்தி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையும் பலத்த மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சாத்தியம் நிலவுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects