‘டித்வா’ புயலினால் சேதமடைந்த மாவிலாறு அணைக்கட்டு தற்காலிகமாகப் புனரமைக்கப்பட்டு, விவசாயிகளுக்கான தண்ணீர் பாவனைக்காக 30.04.2026 அன்று திறந்துவிடப்பட்டது.
இதன் மூலம் 47 விவசாய அமைப்புகளைச் சேர்ந்த 14,000 விவசாயக் குடும்பங்கள், 25,000 ஏக்கருக்கும் அதிக பரப்பளவில் நெற்செய்கையை மீண்டும் ஆரம்பிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மாவிலாறு அணைக்கட்டின் பாதுகாப்புக் கரை சுமார் 5 கி.மீ நீளமுடையது.
புயல் காரணமாக 12 இடங்களில் சுமார் 1.5 கி.மீ தூரம் சேதமடைந்தது.
அதனைப் புனரமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதுவரை சிறுபோக பருவச் செய்கைக்காகத் தற்காலிக அணைக்கட்டைக் கட்டி, தேவையான அளவு தண்ணீரைத் தேக்கி வைக்க நீர்ப்பாசனத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மாவிலாறு நீர்த்தேக்கத்திலிருந்து கல்லாறு, தெஹிவத்த, நீலப்பொல, ஈச்சலம்பற்று, சேருநுவர ஆகிய கிராமங்களுக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்நிகழ்வில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










