7 வருடங்களுக்கு பின் அதிகரித்த வெனிசுலா நாட்டின் எண்ணெய் ஏற்றுமதி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பாவிற்கான ஏற்றுமதி விரைவுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதத்தில் வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதி நாளொன்றுக்கு 1.23 மில்லியன் பீப்பாய்களாக அதிகரித்துள்ளது.

இது 2018 ஆம் ஆண்டிற்குப் பிறகு, அதாவது 7 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச உயர்வு என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வெனிசுலா அரசுக்குச் சொந்தமான பிரதான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான PDVSA இன் தரவுகளின்படி, மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் மாதத்தில் எரிபொருள் ஏற்றுமதி 14% அதிகரித்துள்ளது.

மார்ச் மாதம் 61 கப்பல்கள் எரிபொருளுடன் வெளியேறிய நிலையில், ஏப்ரல் மாதத்தில் அந்த எண்ணிக்கை 66 கப்பல்களாக உயர்ந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவினால் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ பதவியிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு இடைக்கால அரசாங்கம் ஒன்று நிறுவப்பட்டது.

இதன் காரணமாக வெனிசுலா மீது விதிக்கப்பட்டிருந்த தடைகள் தளர்த்தப்பட்டு, எண்ணெய் வளங்கள் அமெரிக்கக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

தற்போது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியச் சந்தைகளுக்கான வெனிசுலாவின் எரிபொருள் ஏற்றுமதிப் பாதை திறக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, அமெரிக்காவின் எண்ணெய் கையிருப்பு மீண்டும் அதிகரித்து வருவதாகவும், அமெரிக்க நிறுவனங்கள் ஏற்கனவே பிராந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வெனிசுலாவின் மசகு எண்ணெயைக் கொண்டு செல்லத் தொடங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects