2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026 ஆம் ஆண்டு தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான இரண்டாம் சுற்று மேன்முறையீடுகளை (Appeals) சமர்ப்பிப்பது குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இரண்டாம் சுற்று மேன்முறையீடுகளை நாளை (08.05.2026) ஆம் திகதி முதல் எதிர்வரும் 29.05.2026 ஆம் திகதி வரை நிகழ்நிலை (Online) முறைமையூடாகச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk இனுள் பிரவேசித்து தமது மேன்முறையீடுகளை மேற்கொள்ளலாம்.
அல்லது http://g6application.moe.gov.lk எனும் இணைப்பினூடாக நேரடியாகவும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
இந்தச் சந்தர்ப்பத்தின் கீழ் ஒரு மாணவர் ஆகக்கூடியது 3 பாடசாலைகளுக்கு மாத்திரமே மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










