இலங்கையில் வசிக்கும் இந்தியப் பிரஜைகள், இந்திய வம்சாவளியினர் மற்றும் ஓ.சீ.ஐ. அட்டைதாரர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றுக்குத் தீர்வுகாணும் நோக்கில், கண்டியிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகரகம் ‘குறைதீர் திறந்த அமர்வு’ ஒன்றை நடத்தவுள்ளது.
குறித்த அமர்வு வரும் இம் மாதம் 14 ஆம் திகதி அன்று முற்பகல் 11:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை கண்டியிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகரகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூதரகத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் இந்தியப் பிரஜைகள் மற்றும் இந்திய வம்சாவளியினர் இந்த அமர்வில் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மத்திய மாகாணத்தில் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்கள், சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்கள், ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டம், வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்திலுள்ள அனைத்து இந்தியப் பிரஜைகளும், ஓ.சீ.ஐ. அட்டைதாரர்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரும் இந்தத் திறந்த அமர்வில் கலந்துகொள்ள முடியும்.
இந்த அமர்வு ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடத்தப்படும்.
தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விரும்பும் பங்கேற்பாளர்கள், அது தொடர்பான அனைத்துத் தேவையான ஆவணங்களையும் தங்களுடன் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










